பாரம்பரிய விவசாயமும் சூழல் சமநிலையும் | இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள் | கலாநிதி கந்தையா பகீரதன்
ஆரம்பத்தில் மனிதன் இயற்கையாக இருந்த சிறு சிறு நிலப்பரப்புக்களில் தான் வேடுவனாக இருந்தபோது சேகரித்த தானியங்களை எந்த நிலப் பண்படுத்தலை செய்யாமல் பயிரிட்டான், அதில் வெற்றியும் கண்டான். இந்த வெற்றி மேலும் பயிர் செய்வதற்கு அவனுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த, மெதுவாக புதர்கள் மற்றும் சிறு மரங்களை வெட்டி நிலத்தை துப்பரவு செய்து விஸ்தரிக்கப்பட்ட அளவில் பயிர் செய்ய ஆரம்பித்தான், உணவு கிடைத்தது, மனிதக் குடித்தொகை பெருக ஆரம்பித்தது. இப்படிச் செய்யப்பட்ட விவசாயம் முற்று முழுவதுமாக இயற்கையுடன் ஒன்றிணைந்து இயற்கை சமநிலைக்கு குந்தகம் ஏற்படாமல் நடைபெற்றது. மனிதனுடைய செயற்பாடுகள் இயற்கையைச் சீண்டும் முகமாகவும் மற்றும் கைத்தொழில் புரட்சியின் மூலம் இயற்கையை அடக்கி ஆளும் முகமாகவும் அமைய ஆரம்பித்தது. இச்செயற்பாடுகள் காலநிலை மாற்றத்துக்கு முக்கிய பங்காக விளங்கும் பச்சை வீட்டு வாயுக்களின் வெளியீட்டுக்கு வகை செய்தது. இப்பச்சை வீட்டுவாயுக்களினால் பூகோள வெப்பநிலை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் காலநிலை மாற்றத்தினையும் தோற்றுவிக்கின்றது. பெருகிய மனிதக் குடித்தொகை கூட்டம் கூட்டமாக வேறு இடங்களுக்கு சென்று வாழத் தொடங்கியபோது வாழும் இடங்களி