பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் : 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகள் – பகுதி 3 | தமிழில் - கந்தையா சண்முகலிங்கம்

Monday 18 September 2023
00:00
00:00

பேராசிரியர். சி. அரசரத்தினம் அவர்கள்  ‘வட இலங்கைத் தமிழர் பொருளாதாரத்தின் அடிப்படைகள்’ எனும் நூலை எழுதினார். இச் சிறுநூல் 1982 ஆம் ஆண்டில் ‘தந்தை செல்வா நினைவு’ இரு நாள் நிகழ்வரங்கில் இவர் நிகழ்த்திய பேருரைகளின் தொகுப்பாகும். முதல் நாள் விரிவுரையில் 17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் வட இலங்கைத் தமிழர் பொருளாதாரத்தின் வளர்ச்சி நிலையை விரிவாக எடுத்துக் கூறினார். இதன் மொழிபெயர்ப்பு எழுநாவில் முன்னர் பிரசுரமாகியது. இம்முறை இரண்டாவது நாள் விரிவுரையாக அமைந்த பிரித்தானியர் ஆட்சிக் காலம் 19 ஆம் 20 ஆம்  நூற்றாண்டுகளில் வட இலங்கைத் தமிழர் பொருளாதரம் – ஏற்பட்ட வளர்ச்சியைக் கூறும் பகுதியினை தருகிறோம். இரண்டாவது நாள் விரிவுரையின் தொடக்கத்தில் பேராசிரியர் முதலாவது விரிவுரையில் தான் கூறியவற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணத் தீபகற்பகத்தில் பொருளாதாரத்தின் பலம் – பலவீனம் எனும் இரு விடயங்களையும் சுருக்கமாகக் கூறியிருந்தார். இதனை அடிக்குறிப்பாகத் தந்திருக்கிறோம்.

More ways to listen