உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் ராஜபக்சாக்களும் | வீரகத்தி தனபாலசிங்கம்

Monday 27 November 2023
00:00
00:00

ஜனாதிபதியாக இருந்தபோது சந்திரிகா குமாரதுங்க பொது நோக்கத்துக்கு பயன்படுத்துவதற்கான அரச நிலத்தை தனியார் கோல்ஃப் மைதானத்துக்கு வழங்குவதற்கு தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக ஓய்வுபெற்ற இரு அரசாங்க அலுவலர்கள் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அவரை குற்றவாளியாக கண்டது.பாதுகாப்பு விவகாரங்களை சரியாகக் கையாளாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில், அவர் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்துக்கோடி ரூபாவை இழப்பீடாக வழங்குமாறு கடந்த ஜனவரியில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மக்கள் தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகமிழைத்ததாகவும் சட்டத்தின் சமத்துவமான பாதுகாப்பைப் பெறுவதற்கு மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையை மீறியதாகவும் ராஜபக்ச சகோதரர்களை குற்றவாளிகளாகக் கண்ட உயர்நீதிமன்றம் இழப்பீடு எதையும் வழங்கவேண்டும் என்று உத்தரவிடவில்லை.பதிலாக அவர்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்த நால்வருக்கும் தலா ஒன்றரை இலட்சம் ரூபாவை வழக்கு செலவுத்தொகையாக செலுத்துமாறு ராஜபக்சாக்

More ways to listen