பகுதி 1 – பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த இந்தியர்களும், வெளிநாடுகளில் இந்திய சமூகங்களும் ஓர் ஒப்பீட்டுக் கண்ணோட்டம் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | முத்துவடிவு சின்னத்தம்

Saturday 4 June 2022
00:00
00:00

1834 ஆம் ஆண்டு பிரித்தானிய சாம்ராச்சியத்தில் அடிமை ஊழியம் ஒழிக்கப்பட்டது. அடிமை ஊழியம் ஒழிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட ஊழியத் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு மேற்கிந்திய பெருந்தோட்டச் சொந்தக்காரர்கள் வறிய ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெள்ளையர்களை வேலைக்காரர்களாகக் கொண்டு செல்லுதல், கடன் ஒப்பந்த முறையில் ஆபிரிக்கரையும் சீனரையும் தொழிலாளர்களாக வரவழைத்தல் போன்ற பல்வேறு மாற்று வழிகளை நாடினர். கடன் ஒப்பந்த முறையின்கீழ் கொண்டு செல்லப்பட்ட மலிவான இந்திய ஊழியத்தைப் பெருந்தோட்ட விவசாயத்தில் கையாளுவது மொறிசியஸ் தீவில் வெற்றியடைந்தமையினால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பல்வேறு தொலைதூர நாடுகளுக்கு தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்டனர். 1810 ஆம் ஆண்டிலேயே முதன்முதலாக தனியார் முகவர்கள் ஒழுங்குப்படுத்திய முறையில் இலங்கைக்கு இந்தியத் தொழிலாளரைக் கொண்டு வந்தனர். #ezhuna #upcountry #malaysia #malayalam #மலையகம் #இந்தியா #மலேசியா

More ways to listen