தொழிலாளர் எழுச்சி குரல்களின் எதிரொலிகள் | கண்டி சீமை | இரா.சடகோபன்

Tuesday 18 October 2022
00:00
00:00

அரசாங்கத்தினதும் துரைமார்களதும் தொழிலாளர் விரோத நடத்தைகள், சட்டங்கள், கொள்கைகள் தொடர்பிலான சேர் பொன். அருணாசலத்தின் கண்டன நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து எரிச்சலையும் சங்கடத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்தன. அதன் காரணமாக பல அரச உயர் அதிகாரிகள் சேர். பொன். அருணாசலம் அரசின் சுமுகமான நிர்வாக நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுகின்றார் என்று காலனித்துவ செயலாளருக்கு புகார் கடிதங்கள் வாயிலாக அறிவித்தனர். இக்காலத்தில் சமூக சேவை லீக் என்ற அமைப்பை அதன் போதாமை கருதி கலைத்து விட்டு,  மேலும் பரவலாக செயற்படும் பொருட்டு ஏனையோருடன் சேர்ந்து இலங்கைத் தொழிலாளர் நலன்புரி  லீக்  (Ceylon Labour Welfare League)  என்ற அமைப்பை அருணாசலம் தோற்றுவித்தார். இலங்கைத் தொழிலாளர் நலன்புரி  லீக்   தனது விரிவான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தது. அவ்வமைப்பு இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளர் வர்க்கத்தினதும் உரிமைகளைப் பாதுகாப்பதும்,  அவர்களின் சமூக, கைத்தொழில் அந்தஸ்தினை உயர்த்துவதையும் தனது நோக்கமாகக் கொண்டிருந்தது. அதன் பொருட்டு அதன் பெயர் "சிலோன் தொழிலாளர் கூட்டமைப்பு"  (Ceylon  Workers 

More ways to listen