விவசாயப் புரட்சியும் சூழல் மாற்றமும் | இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள் | கந்தையா பகீரதன்
இரண்டாம் உலகப் போருக்காக ஆயுதங்கள் மற்றும் போர் உபகரணங்களை உற்பத்தி செய்ய உருவாக்கப்பட்ட இரும்பு, உருக்கு, மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகள் எந்த உழைப்புமில்லாமல் ஐரோப்பா முழுவதும் பூட்டப்பட்டிருந்து. இந்த நேரத்தில் தான் 1940களில் மெக்சிக்கோவில் விவசாய நடைமுறைகளின் மறுசீரமைப்பு தொடங்கியது. இந்த விவசாய மறுமலர்ச்சித் திட்டங்கள் காரணமாக 1950கள் மற்றும் 1960களில் அதிக விளைச்சலைத் தரக்கூடிய உயர் ரக கோதுமை இனங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் உணவு உற்பத்தி ஏக்கருக்கு பலமடங்கு அதிகரிக்கப்பட்டது. பசுமைப் புரட்சி வெற்றியடைந்த போதிலும், பசுமைப் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில், பல எதிர்மறையான குறிப்பிடத்தக்க தாக்கங்கள் எழுந்தன. பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மற்றும் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பிரத்தியேக ஆய்வுகள் பல நடாத்தப்பட்டன