கிழார்களின் வம்ப வேந்தர் | தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும் | ந. இரவீந்திரன்
கி. மு. 3ஆம் நூற்றாண்டில் எழுச்சியுற்ற சேரர், பாண்டியர், சோழர் எனும் முடிவேந்தர்கள் மூவரது பேரரசு எழுச்சிகளுடனேயே தமிழர் வரலாற்றுத் தொடக்கம் ஏற்பட்டதான ஆய்வு முடிவுகள் நிலைபேறுடையனவாக நிலவிவந்தன. மூவேந்தர் எழுச்சியுடன் பேரரசுகள் தோன்றுவதில் வாய்மொழி இலக்கியத்தின் பங்குப் பாத்திரம் குறித்த பேராசிரியர் க. கைலாசபதியின் ‘வீரயுகப் பாடல்கள்’ என்ற முனைவர் பட்ட ஆய்வேடு பெரும் தாக்கத்தை விளைவித்தது. மூவேந்தர்கள் பற்றி அசோகனின் கல்வெட்டுகள் குறிப்பிட்ட நிலையில் இங்கு கண்டறியப்பட்ட எழுத்துகளும் அசோகச் சக்கரவர்த்திக்குப் பின்னரானது என்ற கருத்தும் வலுத்திருந்தது. சோகச் சக்கரவர்த்திக்குப் பின்னரானது என்ற கருத்தும் வலுத்திருந்தது. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அசோகனுக்கு முந்திய ‘தமிழி எழுத்துகள்’ தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் கிடைத்த பல்வேறு கல்வெட்டுகள் வாயிலாக கண்டறியப்பட்ட பின்னர் புதிய சிந்தனைகள் எழுந்தன. கல்வெட்டுகளுக்கு அப்பால் பானையோடுகளில் தமிழ்ப் பிராமி எழுத்துகள் கண்டறியப்பட்ட போது வரலாற்றுத் தொடக்கம் பற்றிய மறுவாசிப்புகள் அவசியப்பட்டன. கைத்தொழில் விருத்திப் பொருட்கள் உட்பட கி.மு. 6ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழி