இன்னொரு உலக ஒழுக்காறு : உலக நாடுகளின் இயக்கச் செல்நெறி | தமிழ் பண்பாடு :  ஊற்றுக்களும் ஓட்டங்களும் | கலாநிதி. ந. இரவீந்திரன்

Tuesday 27 September 2022
00:00
17:21

இன்றைய உலக நெருக்கடிக்குள் ரஷ்யாவை மட்டுமன்றிச் சீனாவையும் சேர்த்தே குற்றம் சாட்டுவதையும் காண்கிறோம். ரஷ்ய - உக்ரேன் யுத்தத்துக்கு முன்னரே அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்திய அணி முன்னெடுத்த உலகப் பொருளாதாரச் செயலொழுங்குகள் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்து இருந்த சூழலில்,  கொரோனாப்பெருந்தொற்று ஏற்பட்டு தனது தலைமேல் பழியை ஏற்றுக்கொண்டது. அந்தக் கொரோனாவை உருவாக்கி பரப்பியது சீனாவே எனும் பிரசாரத்தை அமெரிக்கா மேற்கொண்ட போதிலும்,  விஞ்ஞானிகளும் உலக சுகாதார அமைப்பினரும் தொடர்ந்து அவ்வகையிலான அறிவீனமான பரப்புரைக்கு இடமளிக்காது முற்றுப்புள்ளி வைத்தனர். உலகப் பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடு இலங்கையில் மிக அதிகமான அதிர்வினை ஏற்படுத்தி உள்ளது. கிணற்றுத் தவளையாக இருந்துகொண்டு இங்கே தான் மிக மோசம் எனப் பலர் நம்பும்  வகையில் , ஊடகப் பரப்புரைகளும் அமைந்துள்ளன. 'உணவுப் பணவீக்கத்தில் இலங்கை மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது' என்பது இப்போது வீசப்படுகிற பிரசார வெடிகுண்டு. 1970 கள்  வரை விடுதலை பெற்ற புதிய தேசங்களில் முதல் வரிசைக்குரிய நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த இலங்கை 'மிகக் கேவலமாக கையேந்தும் முதல்நிலை நாடு' எனத் தரந்தா

More ways to listen