யாழ்ப்பாணத்தில் ஆங்கில மருத்துவத்தின் வெற்றிக்கு வித்திட்ட மருத்துவர் கிறீன் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்

Saturday 3 September 2022
00:00
00:00

கடந்த நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத் தமிழர்களின் மனங்களை வெற்றி கொண்ட அந்நிய தேசத்தவர்கள் பலர் இருந்தார்கள்; யாழ்ப்பாணத்திலே வாழ்ந்து தன்னலமற்ற பணியாற்றி தமிழர்களின் மனதிலே இடம்பிடித்த மருத்துவத்துடன் தொடர்புடைய மறைந்துபோன இருவரை இங்கே மீள நினைவூட்டுகின்றேன். ஒருவர், வடமாகாணம் என்று அழைக்கப்பட்ட அன்றைய யாழ்ப்பாண பிராந்தியத்தின் பிரித்தானிய குடியேற்ற நாட்டுப் பிரிதிநிதி, சேர் பேர்சிவல் ஒக்லண்ட் டைக். மற்றையவர், மருத்துவர் கிறீன். டைக் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரசாங்க அதிபராகக் (01.10.1829 - 09.10.1867) கடமையாற்றிவர்.  இவரே யாழ். போதனா மருத்துவமனையின் தாபகர். டைக், யாழ்ப்பாண மக்களுக்கு அளப்பரிய சேவை செய்த அரச அதிகாரிகளில் ஒருவர். தனது சொந்த வருமானத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பை வாங்கி இன்று பழைய பூங்கா என்று அழைக்கப்படும் காணியில் மரங்களை நாட்டி, வளர்த்து யாழ். நகரத்தில் ஒரு பூங்காவை உருவாக்கியவர். அதனை யாழ்ப்பாண மக்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக தனக்குப் பின்னரும் எவரும் அதனை மீள உரிமைகோராத வண்ணம் விக்ரோரியா மகாராணியாரிடமிருந்து விசேட உறுதியையும் பெற்றிருந்தார்.  1847 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 6ஆம் திகதி பருத்தித்த

More ways to listen