கொத்தடிமை முறைமைகளும் எதிர்க்குரல்களும் | கண்டி சீமை | இரா.சடகோபன்

Tuesday 6 December 2022
00:00
00:00

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் அரசியல் நிர்வாகத்தில் பல ஜனநாயக அம்சங்கள் புகுத்தப்பட்டன. அதற்காக கல்விகற்ற இலங்கையர்கள்  உரத்துக் குரல் கொடுத்திருந்தனர். இதற்கு முன்னர், ஆளுநரிடமும், படைத்தளபதிகளிடமும், ஆளுநரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் கரங்களிலும் இருந்த அரசியல் அதிகாரங்கள் இப்போது  மக்கள் பிரதிநிதிகளிடமும் செல்ல ஆரம்பித்தன. ஆரம்பத்தில் 1832 ஆம் ஆண்டில் கோல்புறூக் - கமரூன் அரசியல் நிர்வாக சீர்திருத்தத்திற்குப் பின் ஆளுநரின் தனி அதிகாரம் குறைக்கப்பட்டு, கூட்டுப்பொறுப்பு ஆட்சிமுறை உருவாக்கப்பட்டது. பின் நாடு ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டு பிரித்தானிய அரச அதிபர்களின் பரிபாலனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அரச நிறைவேற்று சபை மற்றும் 19 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு சட்டசபை ஆகியன ஏற்படுத்தப்பட்டன. முன்பு சட்டசபையின் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாக தோட்டத்துரைமார்கள் சமூகத்தை சேர்ந்த ஆங்கிலேயர்களே நியமிக்கப்பட்ட போதும் பின்னர் படித்த ஆங்கிலேய மோகம் கொண்ட மேட்டுக்குடி வர்த்தகர்களும் நியமிக்கப்பட்டனர். இவ்விதம் நியமிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் ஒரு சிங்களவர், ஒரு தமிழர், ஒர

More ways to listen