18ம் நூற்றாண்டில் வடஇலங்கையின் வேளாளர்கள் : வர்த்தகமும் முயற்சியாண்மையும் சமூக உயர்ச்சியும் | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம்
சமூகப்பிரிவுகள் சமூகப்படிநிலையில் உயர்ச்சியடைதல் என்னும் சமூக அசைவியக்கத்திற்கான (Social Mobility) வழிகளில் வர்த்தகமும், முயற்சியாண்மையும்(Entrepreneurship) முக்கியமானவை. யாழ்ப்பாண மாவட்டத்தில் வர்த்தகம், அதனோடு தொடர்புடைய வட்டிக்குப் பணம் கொடுத்தல் ஆகிய நடவடிக்கைகளில் மரபுவழியாக ஈடுபட்டுவந்த சமூகப்பிரிவினர் மிகச் சிறிய எண்ணிக்கையினராக இருந்தனர். இதனால் இச்சிறிய வர்த்தக சமூகப்பிரிவு வேளாளர்களுக்கு அறைகூவல் விடுக்கக்கூடியளவுக்குப் பலம் உடையதாக இருக்கவில்லை செட்டிகள் என்ற சமூகப்பிரிவினரான வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தின் சில கிராமங்களிலேயே குடியேறி வாழ்ந்து வந்தனர். இச்சமூகப் பிரிவினர் கடல்கடந்த வர்த்தகத்திலும் உள்நாட்டில் சில்லறை வர்த்தகத்திலும் செல்வாக்குச் செலுத்தி வந்தனர். புகையிலை, யானை ஏற்றுமதி என்பன முக்கியமான ஏற்றுமதிகளாக இருந்த அக்காலத்தில் செட்டிகள் இப்பண்டங்களின் (Commodities) தரகர்களாக (Brokers) செயற்பட்டு இலாபம் ஈட்டினர். செட்டிகள் சமூகப்பிரிவைச் சேர்ந்த தனிநபர்கள் சிலர் வர்த்தகர், வட்டிக்குப் பணம் கொடுப்போர், ஏற்றுமதிப் பண்டங்களின் தரகர்கள் ஆகிய வகிபாகம் மூலமாக சமூகத்தில் பிரபலம் பெற்ற ஆளுமைகளாக