கதிர்காம முருகன்: சூழலியல் பண்பாட்டுத் தொன்மையும் தொடர்ச்சியும் | என்.சண்முகலிங்கன்

Tuesday 11 April 2023
00:00
00:00

இலங்கையின்  தனித்துவ வழிபாட்டிடமாக கதிர்காம முருகன் ஆலயம் விளங்குகின்றது. வேடர்கள், இந்துக்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து மக்களினதும் சங்கமமாகத் திகழும் கதிர்காமத்தின் தோற்ற மூலமானது வரலாற்றுத் தொன்மையுள் அமிழ்ந்துள்ளது. கடவுளரின் வரலாறானது குறித்த சமூக வரலாற்றுடனும் சூழலியல் சார் பண்பாட்டுடனும் இரண்டறக் கலந்துள்ளது என மானிடவியலாளரான Pettezzoni (1956) குறிப்பிடுவார். இந்த வகையில் கதிர்காம முருகன் ஆலயத்தின் சூழலியல் பண்பாட்டுத்தொன்மையும் தொடர்ச்சியும் பற்றிய ஒரு சமூக மானிடவியல் தரிசனமாக இந்தக்கட்டுரை அமைகின்றது.

More ways to listen