இலங்கை தமிழ் பௌத்தர்கள் - பகுதி 2 | ஆங்கில மூலம் : பேராசிரியர் சுனில் ஆரியரத்ன | தமிழில் : இரா. சடகோபன்
தமிழர்களின் கிராம நிலங்களை அபகரிப்பதை நியாயப்படுத்தும் சிங்களவர்கள், அவர்களின் பூமியில் பௌத்த இடிபாடுகள் இருப்பதனை காரணமாக முன்வைக்கிறார்கள். அத்தகைய இடிபாடுகள் முதலானவற்றை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் புத்த பிக்குகள் குடியேற்றப்பட்டனர்.விகாரையை மையப்படுத்தி சிங்கள பௌத்த குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டது. புதிதாகக் குடியேற்றப்பட்ட இந்தச் சிங்களவர்களுக்கே அப்பகுதியின் நிர்வாகமும் வழங்கப்பட்டது. பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் அசல் தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறே மணலாறு வெலிஓயாவாக மாறியது.இத்தகைய நிலையில் 'பௌத்தம்' என்ற வார்த்தையைக் கேட்கக்கூட இலங்கைத் தமிழ் மக்கள் அஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டது. தமிழர் பகுதியில் பௌத்த இடிபாடுகள் இருப்பதாக கேள்விப்பட்ட உடனேயே சிங்களவர்கள் தங்களை வெளியேற்றி விடுவார்கள் என தமிழ் மக்கள் கருதுகின்றனர்.பௌத்தர்களுக்கு ஒவ்வொரு பௌத்த எச்சமும் சிங்கள பௌத்த எச்சமாகவே தோன்றுகிறது. அதனால் தமிழ் மக்கள் பௌத்த சிங்கள இடிபாடுகளை அழிப்பதாகவும் கூறுகிறார்கள்.மணிமேகலை என்ற பௌத்த மத காவியம், குறிப்பாக தமிழில் பௌத்த மதத்தை பிரச்சாரப்படுத்தும் முக்கிய காவியமாக திகழ்ந்த போதும், அது ஒரு