கீழைக்கரைக்கான வரலாற்றுச் சான்றுகள் : கல்வெட்டுக்களும் பொறிப்புகளும் | ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்தராஜா துலாஞ்சனன்
கீழைக்கரை தொடர்பான வரலாற்றைக் கட்டியெழுப்புவதற்கு மூன்று வகையான ஆதாரங்களை நாம் பயன்படுத்தலாம். முதலாவது பொறிப்புச் சான்றுகள், இரண்டாவது எழுத்துச் சான்றுகள், மூன்றாவது வாய்மொழி மற்றும் தொன்ம மரபுரைகள். பொறிப்புச் சான்றுகள் (Epigraphic Sources): - அண்ணளவாக பொ. மு 4ஆம் 3ஆம் நூற்றாண்டிலிருந்து கீழைக்கரையெங்கணும் தொடர்ச்சியாக கல்வெட்டுக்களும் உலோக மட்பாண்டப் பொறிப்புகளும் பரவலாகக் கிடைத்துள்ளன. இவற்றில் அவ்வவ் காலத்தில் வாழ்ந்த மக்கள், அவர்களின் மொழிகள், சமயம், வாழ்வியல் கோலங்கள், நம்பிக்கைகள், என்பன பற்றிய பல தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. இலங்கையில் ஈழப்பாகதம்[1], சிங்களம், தமிழ், சங்கதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட பொறிப்புச் சான்றுகள் கிடைத்துள்ளன. ஈழத்துக் கீழைக்கரையில் 175இற்குக் குறையாத பிராமிக்கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன[2]. இன்னும் வாசிக்கப்படாத ஏராளமான கல்வெட்டுக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. அவை பெரும்பாலும் பிராமி எழுத்துருவில் ஈழத்துப் பாகத மொழியில் எழுதப்பட்டவை. ஆனால் கீழைக்கரையில் மாத்திரமன்றி, முழு இலங்கைத் தொல்லியலிலும் கடந்த 15 ஆண்டுகளில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில்