மூலிகை மருந்துகள் – பகுதி 3 | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம்

Wednesday 30 November 2022
00:00
00:00

ஆயுள்வேதமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகைகளுள் கடுகுரோகிணியும் ஒன்று. ஈரல் சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. மஞ்சட்காமாலை (செங்கமாரி) அலேர்ஜி ஆஸ்த்மா போன்ற நோய்களின் சிகிச்சையில் பெரிதும் பயன்படும் இம்மூலிகை, அருகிவரும் தாவர இனங்களுள் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனைத்திப்பிலி ­ - தோல்வியாதிகள் ஆஸ்த்மா வயிற்றோட்டம் நீரிழிவு என்பவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இத்தாவரத்தின் இலைத்தூள், களை மூக்கில் இரத்தம் வடிவதை நிறுத்த முகரப்படுகிறது. வலம்புரிக்காய் - வலம்புரிச் செடியின் வேர் நீரிழிவுக்கு மருந்தாகப் பயன்படக்கூடும் என்னும் விபரம் சமீபத்தைய ஆய்வுகளின்மூலம் தெரியவந்துள்ளது. வெட்பாலரிசி - இது சொறி எக்சிமா போன்ற தோல் வியாதிகளுக்கென பயன்படும். எண்ணெய்த்தயாரிப்புக்களில் வெட்பாலரிசி சேர்க்கப்படுகின்றது. பொடுகை நீக்கும் குணமும் இதற்கு இருப்பதால் கூந்தல் தைலங்களிலும் வெட்பாலை அரிசி சேர்க்கப்படுகின்றது. சிறுதேக்கு -  மூட்டுவாதம் செமியாக்குணம் வயிற்றுவலி நெஞ்செரிவு குடற்புழு மலேரியா ஆஸ்த்மா போன்ற பல்வேறு வியாதிகளுக்கான மருந்துத் தயாரிப்புக்களில் பாரங்கி எனப்படும் சிறுதேக்கின

More ways to listen