குயர் மக்கள் பற்றிய சமூகப்பார்வை : தனிநபர் வாழ்வு அவர்களது தீர்மானம் | வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல் | அனுதர்ஷி கபிலன்
குயர் மக்கள் என்போர் யார்? அவர்களை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா? இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா? இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்? என்றவாறாக ஏராளமான வினாக்கள் எம்மத்தியில் காணப்படுகின்றன.
பால், பால்நிலை, பாலீர்ப்பு போன்ற விடயங்களின் அடிப்படையில் மனிதர்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். குயர் சமூகத்தினுள் தன்பாலீர்ப்பாளர்கள், திருநர்கள், இருபாலீர்ப்பு உள்ளவர்கள், பாலீர்ப்பு அற்றவர்கள் எனப் பல்வேறுவிதமான மக்கள் வாழ்கின்றனர். குயர் சமூகங்களின் அரசியலும் அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்களும் ஒடுக்குமுறைகளும் ஏராளமானவை.
நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள், விதிமுறைகள், கொள்கைகள் என்பவற்றைத் தனிமனிதன் மீது சுமத்துவதான வாழ்வியலை சமூகம் கட்டமைத்திருக்கிறது. குயர் மக்களும் இந்த சமூகத்தின் ஓர் அங்கம் என்பதை ஏற்றுக்கொள்ள இந்தச் சமூகம் தயாராக இல்லை. இலங்கையின் மதம் சார்ந்த சமூகக் கட்டமைப்பு குயர் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுவிதமான வன்முறைகளுக்கு அடிப்படையாக அமைகின்றது.
இலங்கையின் வடபுலத்திலும் கூட குயர் மக்கள் குறித்த சமூகத்தின் பார்வையானது மதம் மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் இருக்கிறது.
#lgbtq #lgbt #gay #pride #queer #lesbian #love #gaypride #bisexual #transgender #trans #gayboy #lgbtqia #lgbtpride #pridemonth #lgbtcommunity #jaffnapride #pridemonth2022 #lgbtqia+ #jaffna #transgenderrights #TamilLGBTQ