பசியும், பிணியும் போக்கும் அரிசி | மாறுபாடில்லா உண்டி | தியாகராஜா சுதர்மன்
தாவரப் பொருட்களில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் பிரதான உணவாக நெல், குரக்கன், தினை, வரகு, சாமை போன்ற தானியங்களே அமைந்துள்ளன. இவற்றிலும் நெல்லில் இருந்து பெறப்படும் அரிசி, அரிசி மா என்பன பிரதான உணவு வகைகளில் முதன்மையாக இருக்கின்றன. பொதுவாக நெற்பொரியானது உணவாகப் பயன்படுத்தப்படாவிடினும் நோய்நிலைகளில் முக்கியமாக குழந்தைகள், சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்றது. காய்ச்சல், வாந்தி, கழிச்சல் போன்ற நிலைகளில் உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கவும், காய்ச்சலினைக் குறைக்கவும் வீடுகளிலேயே நெற்பொரியினை அவித்து, அதன்மூலம் வரும் நெற்பொரித் தண்ணீரைக் கொடுப்பது நமது பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாகும். யாழ்ப்பாணத்தில் புளிக்கஞ்சியானது காய்ச்சல் உள்ளபோது, நோய்கள் வந்து மாறியபின், உடல் அசதி ஏற்படும்போது கொடுக்கப்படுகின்றது. இது உடலில் பசியைத் தூண்டுவதுடன், வியர்வையையும் உண்டு பண்ணுகின்றது. நோய்நிலைகளில் வாயில் உணவு உட்கொள்ளமுடியாத நிலைகளில் புளிக்கஞ்சி வாய்க் கைச்சலை இல்லாது செய்கின்றது. புனற்பாக கஞ்சி தீவிர நோய்நிலைகளில் நோய்க்குப் பத்தியமாகக் கொடுக்கக்கூடியது. கஞ்சியை மீள மீள வடித்து நீரினை வெளியகற்றி, சோறு நன்றாகக் கரைந்து நீ