மதுவுக்குள் சிக்குண்ட மலையகம் : அடிமைப்படுத்தலின் நவீன உத்தி | கண்டி சீமையிலே - 2 | இரா. சடகோபன்
17 ஆம் ,18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய ஆக்கிரமிப்பு வெறியர்கள் ஏகாதிபத்தியங்களாக எழுச்சி பெற்று உலகம் முழுவதையும் தம் காலடியில் போட்டு மிதித்து விடவேண்டும் என்று வேட்கை கொண்டிருந்தனர். பிரிட்டிஷ்காரன் என்ற மகா பாதகன் ஆப்பிரிக்கக் கண்டத்தை சின்னா பின்னப்படுத்திய பின்னர் ஆசியாவை நோக்கி படை திரட்டிக்கொண்டு வந்தான். பிரிட்டிஷார் தாம் அடிமைப்படுத்திய மக்களிடையே அறிமுகப்படுத்திய மதுப் பழக்கத்திலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும் ஏன் ஏனைய மக்களும் கூட இன்றுவரை மீறமுடியாது உள்ளது. இலங்கைப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் ஆரம்ப காலகட்டமான 1830 களில் இருந்து தொழிலாளர்களின் வதிவிட எல்லைப்புறங்களில் சாராயம் மற்றும் கள்ளுத்தவறணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. அரசாங்கம் சாராயத் தவறணைகளை ஆரம்பித்தவுடனேயே கள்ளச்சாராய விற்பனையும், எரிசாராய உற்பத்தியும் பெருந்தோட்ட பகுதிகளில் பல்கிப் பெருகின. அரசாங்க அனுமதி பெற்ற சாராயக் கடைகளில் கிடைத்த சாராயத்தை விட மலிவு விலையில் கிடைத்தமையே இவற்றின் பெருக்கத்துக்கு காரணமாக இருந்தது. 1897ஆம் ஆண்டளவில் தோட்டங்களை அண்டிய பிரதான பாதைகளின் இரு மருங்குகளிலும் சாராயத் தவறணைகள் அமைக்க