அடையாள அரசியலும் இலங்கையும் | இலங்கையில் அடையாள அரசியல் - சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப் புரிதல் | கலாநிதி சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம்
தமிழர்கள் தங்களுடைய போராட்ட அரசியலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 70 வருடங்கள் எனலாம். இந்த எழுபது வருட காலத்தில் தமிழர்களின் அடிப்படைக் கொள்கையும் அதனை அடைவதற்கான போராட்ட வடிவங்களும் அணுகுமுறைகளும் பலவாறு மாற்றம் அடைந்து வந்திருக்கின்றன. இருந்தபோதிலும் இவை தமிழர்களுடைய அடிப்படை அரசியல் இருப்பை, அதனூடான அரசியல் உரிமைகளை எந்தளவுக்கு தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றன என்றொரு கணக்கெடுப்புக்கு வருவோமாயின் நிச்சயமாக மறை பெறுமானத்தில் தான் எமது விடை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இது ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றிய ஒரு கோட்பாட்டுப் புரிதலை நாம் இதுவரை செய்யாமல் நாம் தொடர்ந்து அதே வாய்ப்பாடுகளை கூறிக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் பழியைச் சுமத்திக் கொண்டு இன்னும் 100 வருட காலத்துக்கு இதே வகையான அரசியல் செய்வோமாக இருந்தால் எமக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை என்றொரு நிலையில் வந்து நிற்போம் என்பது புலனாகிறது. எமது அரசியல் தலைவர்கள் வரலாறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு அரசியல் செய்யாமல், தேர்தல் அரசியலையும் தங்களுக்கான சுயநல அரசியலையுமே செய்து வந்திருக்கிறார்கள்/ செய்து வருகிறார்கள். இவ்வாறான நிலையிலிருந்து எமது