கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : பாளி சிங்கள இலக்கியங்கள் | ஈழத்துக் கீழைக்கரை - ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்தராஜா துலாஞ்சனன்
Tuesday 29 November 2022
00:00
00:00
கீழைக்கரை தொடர்பான எழுத்துச் சான்றுகளில் பௌத்த பாளி இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள், தமிழக இலக்கியங்கள், ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள், பிறநாட்டவரின் பயணக்குறிப்புகள், காலனித்துவ காலக் குறிப்புகள் என்பன அடங்கும். புத்த சமயத்தின் பரவலோடு, பாளி மொழியில் பல இலக்கிய முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் “வம்சக்கதை” என்ற வகையறாவைச் சேர்ந்த நூல்கள் முக்கியமானவை ஆகும். குறிப்பிட்ட புத்த சமயப் பேசுபொருளொன்றை அல்லது பலவற்றை எடுத்துக்கொண்டு இந்நூல்கள், அரசியல் வரலாற்றுக் காலகட்டமொன்றை விவரிக்கின்றன. இவற்றில் மிகப்பழையது தீபவம்சமாகும். இதை அடுத்து எழுந்த மகாவம்சம், அதன் தொடர்ச்சியான சூளவம்சத்துடன் இணைத்து இலங்கையின் மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக முன்வைக்கப்படுகின்றது.
More ways to listen