இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் பரமு. புஷ்பரட்ணம்
1970களிலிருந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விஞ்ஞான பூர்வமான தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் வடஇந்தியக் குடியேற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்குப் பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் மனித வரலாறும், நாகரிக வரலாறும் தோன்றிவிட்டதை உறுதிசெய்கின்றன. இவை தமிழ், சிங்கள மக்களின் பூர்வீகவரலாறு, பண்பாடு பற்றிய பாரம்பரிய வரலாற்றுக் கதைகளையும், நம்பிக்கைகளையும் மீளாய்வு செய்யத் தூண்டியுள்ளன. அவற்றை மேலும் உறுதிப்படுத்துவதில் கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகளில் கண்டு பிடிக்கப்பட்ட பூர்வீக மக்கள் பற்றிய சான்றுகளுக்கு முக்கிய இடமுண்டு.
வடஇலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புரதான குடியிருப்புமையமாகக் கட்டுக்கரைப்பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கட்டுக்கரைப் பிரதேசத்தின் பூர்வீக மக்கள், பண்பாடு என்பவற்றைக் கண்டறியும் நோக்கில் 2016-2017 காலப்பகுதியில் இரு இடங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கையில் விஜயன் யுகத்திற்கு முந்திய நாகரிக வரலாறு உண்டு என்பதற்கு தொல்லியற் கண்டுபிடிப்புக்களை ஆதாரங்களாகக் காட்டியிருக்கும் பேராசிரியர் சேனகபண்டாரநாயக்கா இலங்கை மக்களின் இன அடையாளங்களுக்கு உடற்கூற்றியல் வேறுபாடுகள் காரணமல்ல, பண்பாட்டு வேறுபாடுகளே காரணம் என்றும் அப்பண்பாட்டு வேறுபாடுகளை இலங்கையில் நாகரிக வரலாறு தோன்றிய காலத்திலிருந்து ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றார்
#கட்டுக்கரைஅகழ்வாய்வு #Kaddukkaraiarchaeologicalstudies #malvathuoya #Aruviyaru #kaddukkarai #kaddukkaraikulam #NorthernSriLanka #Universityofjaffna #Historicalheritage