வட்டுக்கோட்டைக் கல்விக்கழகம் உருவாக்கிய மருத்துவர் ஐரா கௌல்ட் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்
மருத்துவர் ஐரா கௌல்ட் 1850 இல் யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் மருத்துவமனை (FINS Hospital - தற்போதைய போதனா மருத்துவமனை) ஆரம்பிக்கப்பட்டபோது மருத்துவமனையின் முதலாவது டிஸ்பென்சராகவும் முதலாவது வதிவிட சத்திரசிகிச்சை மருத்துவராகவும் கடமையைப் பொறுப்பேற்றார். மருத்துவர் கிறீன், மானிப்பாயில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடமையாற்றியவாறு யாழ். நகரத்தில் 1850 இல் தாபிக்கப்பட்ட ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக மருத்துவமனையின் முதலாவது வருகை சத்திரசிகிச்சை நிபுணராகவும் பணியாற்றினார் (First Visiting Surgeon of the Jaffna Teaching Hospital). மானிப்பாயில் கிறீன் ஆரம்பித்த டிஸ்பென்சரி வெளிநோயாளர் மருத்துவமனையாகவே விளங்கியது. பிரித்தானிய குடியேற்ற நாட்டுச் செயலாளர் சேர். எமர்சன் ரெனன்ற் 1848 இல் வட்டுக்கோட்டை செமினரியைப் பார்வையிட்டு கல்லூரியை ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்கு இணையாகக் குறிப்பிட்டிருந்தார். தென்னிந்தியச் திருச்சபையின் யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது பேராயராக விளங்கிய வண. சபாபதி குலேந்திரன், வட்டுக்கோட்டை செமினரி பெற்றிருந்த உயர்நிலையை இலங்கையின் எந்த ஒரு உயர்கல்வி நிறுவனமும் இன்று