யாழ்ப்பாணமும் மருத்துவ – அறிவியல் கற்கைகளின் பரவுகையும்! | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்
மருத்துவர் ஜோன் ஸ்கடரை அடுத்து அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த 2 ஆவது தகுதிவாய்ந்த மருத்துவர் நேத்தன் உவோட் ஆவர். மருத்துவர் நேத்தன் உவோட்டின் வருகையைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை குருமடத்தின் (Batticotta Seminary) முதல்வராக இருந்த டானியல் பூவர், யாழ்ப்பாணத்தில் மருத்துவமனையையும் மருத்துவக் கல்லூரியையும் ஆரம்பிப்பதன் அவசியம் பற்றி 1835 இல் அமெரிக்காவிலுள்ள மிசன் பணியகத்துக்குக் கடிதம் வரைந்தார். வட்டுக்கோட்டை குருமடம் ஆசியாவில் நிறுவப்பட்ட முதலாவது கிறிஸ்தவ உயர்கல்வி நிறுவனமாகும். 1855 இல் குருமடத்தின் கல்விச் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன. இந்தப்பாடசாலையே இன்று யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் விளங்குகிறது. 1831 இல் மைக்கல் பரடே மின்சாரத்தை உற்பத்திசெய்யும் டைனமோவை கண்டுபிடித்தார். பரடே காந்தத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என்பதைக் கண்டுபிடித்து பத்து வருடங்கள் நிறைவுற்றிருந்த காலத்தில் வட்டுக்கோட்டை குருமட உயர்கல்வி நிறுவனத்தில் மின்னியல் என்பது ஒரு பாடமாக இருந்தது. வட்டுக்கோட்டை குருமட உயர்கல்வி நிறுவனத்தின் அன்றைய கல்வித் தரத்தை மதிப்பிடும் அளவுகோலாக பிரித்தானிய குடியேற்ற ந