பன்முகத்தன்மை (Diversity): குடும்பமும் தொழில்முனைவோருக்கான ஆரம்பப் பயிற்சிகளும் | ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை | ரூபன் கணபதிப்பிள்ளை
இன்றைய கால வாழ்க்கையில் எம்மை மேலே உயர்த்தவும் நாட்டை அபிவிருத்தி செய்யவும், அத்தோடு உலகளாவிய வகையில் இணைந்து வாழ்வதற்கும் புதுத்தொழில் முறை (Startup companies) மிக்க உதவியாக இருக்கிறது. இந்த புதுத்தொழில் முறையை எல்லா விதமான வணிகத்துறையிலும் பிரயோகிக்கலாம். உதாரணமாக கடற்தொழில், விவசாயம், வர்த்தகம், மருத்துவம் என்று எந்த தொழில்களைப்பற்றி ஆராய்ந்தாலும் அவற்றை உருவாக்குவது தொடக்கம், பின்பு வளமாக்கி அவற்றை உலகளாவிய ரீதியில் வாடிக்கையாளர்களை கைப்பற்றி வெற்றி பெறலாம். எனது குடும்பத்தவரிடமும் என் மூதாதையரின் செயலிலும் கற்றுக்கொண்ட பன்முகத்தன்மை எனது தொழில் முயற்சிகளுக்கு எவ்வாறு கைகொடுத்தன என்பது பற்றி பகிர நினைக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த இடம் யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் புலவர்கள் ’ஒலி’ பாடிய கிராமமான புலோலி. அங்கு வாழ்ந்தவர்கள் மற்றைய தமிழ் மக்கள் போலவே சிறந்த வளம் கொண்ட மக்கள் ஆவர். இலங்கையின் வடக்கு பகுதியானது, வருடத்தின் சில நாட்களே மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறும் நிலமென்றாலும், மக்கள் அந்த நிலத்தை சாதூரியமாகப் பயன்படுத்தி பல தொழில்களைச் செய்து வந்தார்கள். அப்படியான ஒரு குடும்பத்தில் தான் நான் பிறந்தேன