பனையே எங்கள் வாழ்வியலின் ஆதாரம் | வடக்கின் விருட்சங்கள் | சாரதாஞ்சலி மனோகரன்

Wednesday 20 July 2022
00:00
00:00

னை ஒரு காலத்திலே எங்கள் வாழ்வியலுடன் ஒன்றித்துப் போயிருந்தது. இலங்கை தேசம் பல்லினப் பனை மரங்களின் இருப்பிடமாக, வாழிடமாகத் திகழ்ந்திருந்ததன் சான்றுகளாக காலனித்துவ கால நூல்களே இன்று எம் மத்தியில் எஞ்சியிருக்கின்றன.  தாளிப்பனையின் ஓலையை விரித்து வைத்தால் 12 தொடக்கம் 15 அடி ஆரையுள்ள அரை வட்டத்தை ஆக்கமுடியுமெனவும் அதன் பரப்பளவு அண்ணளவாக 150 சதுர அடிகளாகவிருக்கும் எனவும் காலனித்துவ கால நூல்களிலே குறிப்பிடப்படுகிறது. தாளிப்பனை மட்டையின் நடுப்பகுதியை உரலிலே இடித்து மாவாக்கி பணியாரம் செய்து உண்ணும் வழக்கம் இலங்கை மக்களிடம் காணப்பட்டதாகவும் அப்பணியாரத்தின் சுவை பாணின் சுவையை ஒத்ததாகவிருந்ததாகவும் தாவரவியல் பேராசிரியராகவிருந்த ஈதல் பேர்ள் ப்லட்டர் என்பவர் ‘பிரித்தானிய இந்தியா, சிலோனின் பனைத் தாவரங்கள்’ என்ற தனது நூலிலே குறிப்பிடுகிறார்.  அன்றொரு நாள் வரமாக, எங்கள் அன்றாட வாழ்வின் பல நூற்றுக்கணக்கான தேவைகளைப் பூர்த்திசெய்த தாளிப்பனைகளை இன்று காண்பதுவே அரிதாகிவிட்டது.  #talipotpalm #Peradeniya #botanicalgarden #SriLanka #MarianneNorth #palmtrees #FloraPanama #CoryphaUmbraculifera #தாளிப்பனை #வடக்கின்விருட்சம்

More ways to listen