படித்த சமுதாயம் புதிய சிந்தனைகள் | கண்டி சீமையிலே - 2 | இராமையா சடகோபன், சட்டத்தரணி, சிரேஷ்ட ஊடகவியலாளர்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் நாட்டில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி காரணமாக கொழும்பை மையமாகக் கொண்ட தொழிலாளர் அமைப்புகள் உருவாகின. ஏ. ஈ. குணசிங்க என்ற ஆரம்பகால தொழிலாளர் தலைவர், நகர்ப்புற தொழிலாளர்களான துறைமுக, ரயில்வே , டிராம்வே தபால் துறை, கரத்தை (வண்டியில்) இழுப்பவர்கள், சலவைத் தொழிலாளர்கள், அச்சுத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களை ஒன்று திரட்டி வெற்றிகரமான போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் முன்னெடுத்தார். இத்தகைய தொழிலாளர் எழுச்சிகள் எந்தவிதத்திலும் மலைநாட்டு தோட்டத் தொழிலாளர் மத்தியில் பரவிவிடக்கூடாது என்பதில் தோட்டத் துரைமார்கள் மிகுந்த கரிசனை எடுத்துக்கொண்டனர். #realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம் #தோட்டத்தொழிலாளர்கள் #மலையகப்பெண்கள் #தேயிலைத்தோட்டம் #1000ரூபாசம்பளம்