யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகளில் எண்ணெய் வகைகள் | மாறுபாடில்லா உண்டி | Dr தியாகராஜா. சுதர்மன்

Wednesday 4 January 2023
00:00
00:00

எமது பாரம்பரிய உணவுப்பழக்கங்களில் எண்ணெய் வகைகளின் பாவனையானது மட்டுப்படுத்தியதொன்றாகவே இருந்து வந்துள்ளது. நாம் உட்கொள்ளும் உணவுகளில் தனியே கொழுப்பு உணவுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. சமையலின்போது எண்ணெய் வகைகளானது பொரித்தல், தாளித்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றது. மாப்போசணைக் கூறுகளில் ஒன்றான கொழுப்புச்சத்துக்கு, மாமிச உணவு உண்பவர்களாயினும் சரி, சைவ உணவு உண்பவர்களாயினும் சரி பெரிதும் தங்கியிருப்பது தேங்காய்ப்பால், பால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் என்பனவற்றில் ஆகும். காலப்போக்கில் வர்த்தக நோக்கில் எண்ணெய்களைச் சுத்திகரித்துக்கொள்ளும் (Refined) போதும், அதிக அளவில் உணவுகளில் உடலுக்கு ஒவ்வாத கொழுப்புக்களே (Trans fat - இது கெட்ட கொழுப்பினை (Low Density Lipoprotein) அதிகரிக்கும்) கிடைக்கின்றன. தேங்காய் எண்ணெய்  அதிகளவில் நிரம்பிய கொழுப்பமிலங்களைக் கொண்டிருப்பதினால்  உடலுக்கு கேடுதரக்கூடிய கொழுப்புக்கள் உருவாகுவதில்லை. ஆனால் நாம் இன்று பாரம்பரியமாகச் சமையலுக்குப் பாவித்துவந்த தேங்காய் எண்ணெயை விட்டுவிட்டு கேடுதரக்கூடிய பாம் எண்ணெய் , மரக்கறி எண்ணெய்  போன்ற  எண்ணெய்களைப் பயன்படுத்தி வருகின்றோ

More ways to listen