சிங்கோனா: திடீர் எழுகையும் வீழ்கையும் | கண்டி சீமையிலே - 2 | இராமையா சடகோபன்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தம் வரை இலங்கையின் பொருளாதாரத்தில் சக்கரவர்த்தி என கோலோச்சிய கோப்பி பல தனவந்தர்களையும் வங்கிகளையும் கூட வங்குரோத்து ஆக்கிவிட்டு அகாலத்தில் மாண்டு போனது. அதன் புதைகுழியிலிருந்து பீனிக்ஸ் பறவை என தேயிலை என்ற கரும்பச்சை நிறச்செடி புறப்பட்டு வந்தது என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் ஒரு விளைவாக 1860 ஆம் ஆண்டளவில் ஒருதொகை சிங்கோனா விதைகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கையின் பேராதனைத் தாவரவியல் பூங்காவின் பணிப்பாளராக அப்போது செயற்பட்டு வந்த கலாநிதி ஜி. எச். துவாய்ட்சுக்கு அனுப்பப்பட்ட இந்த விதைகளை, அவர் பரீட்சித்துப் பார்ப்பதற்காக நுவரெலியா, ஹக்கல பூங்காவின் பொறுப்பாளர் மெக்னிகோல் (maknicall) என்பவருக்கு அனுப்பி வைத்தார். கோப்பிச் செய்கையின் அழிவால் பாதிக்கப்பட்ட பல பெருந்தோட்ட சொந்தக்காரர்களும் சிங்கோனா, கரும்புத் தோட்டம், றப்பர், கொக்கோ போன்ற வேறு பயிர்களை நாடிச் சென்றனர். இதே காலப்பகுதிகளில் கோப்பியின் இடத்துக்கு தேயிலையை பிரதியீடாக கொண்டு வந்து விட வேண்டும் என்று பலரும் பல பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்த போதும் அவை அநேகமாக தோல்வியி