திரிகடுகம் | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம்
கி.பி.15ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செகராஜசேகரன் என்னும் பெயருடன் நல்லூரில் இருந்து ஆட்சிசெய்த மன்னன் ஒருவனே செகராசசேகரமாலை என்னும் சோதிடநூலும் செகராசசேகரம் என்னும் வைத்தியநூலும் தோன்றக் காரணமாயிருந்தான் என்பதற்கான வரலாற்றுச்சான்றுகள் உள்ளன. செகராசசேகரம் என்னும் மருத்துவ நூலின் ஒரு சில பாகங்களே அச்சில் வெளிவந்துள்ளன. செகராசசேகரத்தின் சிலபகுதிகள் நூல் உருப்பெறவில்லை. அதிர்ஷ்டவசமாக 'செகராசசேகரத்துக்குரிய இரசவர்க்கம்' என்னும் பகுதியைக் கொண்ட ஏட்டுப்பிரதி பாரம்பரிய மருத்துவர்களான எமது மூதாதையரிடம் இருந்து எமக்கு வந்துசேர்ந்துள்ளது. உடலுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும் மருந்துப்பொருள்களின் குணங்களை எடுத்துரைக்கும் இந்தப்பகுதி வெண்பாக்களால் ஆனது. நூற்றி எட்டுப்பாடல்கள் மாத்திரமே எமக்குக் கிடைத்த ஏட்டுச்சுவடிகளில் காணப்படுகின்றன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றின் பெயர் திரிகடுகம். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மூலிகைகளை உள்ளடக்கியது திரிகடுகம் என்னும் ஆயுள்வேத மருந்து. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே திரிகடுகம் என்னும் மருந்து தமிழர்களு