பொன்னம்பலம் குமாரசாமி குடும்பம் | சேர்.பொன். அருணாசலம் : வாழ்வும் பணிகளும் - ஒரு பன்முக நோக்கு |ஆங்கிலத்தில் : குமாரி ஜெயவர்த்தன | தமிழில் :கந்தையா சண்முகலிங்கம்

Wednesday 13 March 2024
00:00
32:48

சேர்.பொன். அருணாசலம் தமிழர்களின் அரசியலில் முக்கியமான வகிபாகத்தைப் பெற்றிருந்த ஒருவராவார். இவர் சேர்.பொன். இராமநாதனின் இளைய சகோதரர். இவ்விரு சகோதரர்களைப் பற்றியும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வாழ்க்கை வரலாறு, அரசியல் விமர்சனம் என்ற வகையிலான நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. இவற்றுள் சேர்.பொன். அருணாசலத்தின் வாழ்க்கை வரலாறு, அவரது பணிகள், அரசியல் வகிபாகம் என்பன குறித்த நூல்களையும் கட்டுரைகளையும் ஒருசேரத் தொகுத்து நோக்குவதும் விமர்சன முறையிலான மதிப்பீட்டையும் புரிதலையும் தமிழ் வாசகர்கள் மனதில் உருவாக்குவதும் இத் தொடரின் நோக்கமாகும். ஆய்விற்குரிய ஒரு விடயப்பொருள் குறித்த பன்முகப் பார்வையினை வழங்கும் ‘A Reader by letters’ என்ற வகை நூல்கள் இன்றைய காலத்தின் தேவையாகும். இக் கட்டுரைத் தொடர் ‘சேர்.பொன். அருணாசலம் : வாழ்வும் பணிகளும் - ஒரு பன்முகப் பார்வை’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிடும் ‘எழுநா’வின் திட்டத்தின் ஆரம்பப் பணியாக அமைகிறது.

More ways to listen