சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகை மறுசீரமைப்பு அறிக்கையும் அதன் பரிந்துரைகளும் : சில அவதானிப்புகள் - பகுதி 1 | கலாநிதி இரா. ரமேஷ்
தற்போது இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பாகப் பரந்த கலந்துரையாடல் (ஆதரவாகவும் எதிராகவும்) பாராளுமன்றத்திலும், அரசியல் பரப்பிலும், சிவில் சமூக மட்டத்திலும் இடம்பெற்று வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருப்பதனைப் பார்க்க முடிகிறது. அது IMF இன் பொதுவான நடைமுறையும் கூட. அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் ஆளுகை செயன்முறையில் உள்ள குறைபாடுகளை ஆழமாக மதிப்பீடு செய்து, 139 பக்கங்களைக் கொண்ட ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது (Governance Diagnostic Report: file:///C:/Users/u;R%20LAP%201/Downloads/1LKAEA2023002.pdf). அந்த அறிக்கையில் இலங்கையின் ஆளுகைக் கட்டமைப்பில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பிரதான 16 மறுசீரமைப்புகள் மற்றும் மாற்றங்கள் குறித்து விரிவான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.