சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு | கண்டி சீமையிலே - 2 | இராமையா சடகோபன், சட்டத்தரணி, சிரேஷ்ட ஊடகவியலாளர்

Thursday 23 June 2022
00:00
00:00

மத்திய மலைநாட்டில் மலையகத் தமிழர்களின் வருகையுடன் மலைகள், பள்ளத்தாக்குகள் மட்டம் தட்டப்பட்டு கோப்பிக் கன்றுகள் நாற்று நடப்பட்டன. முதலில் நூற்றுக்கணக்காக நடப்பட்ட கன்றுகள் பின்னர் ஆயிரமாக , லட்சமாக வளர்ந்து, பூத்துக்குலுங்கி, காய்த்து கோப்பிக் கொட்டைகளாகி பெரும் வர்த்தகப் பொருளாக உருவாகின. இந்த நாட்டின் ஏனைய குடிமக்கள் தமக்கென அமைத்துக் கொண்ட வீட்டில் அது ஒரு குடிசை என்றாலும்கூட சுதந்திரமாக வாழ்ந்த போது மலையகத் தமிழ் மக்களை வெறும் கூலிகள் என்ற வார்த்தையால் கொச்சைப்படுத்தி இருண்ட குகைகளான லயம் என்ற வரிசையான அறைகளுக்குள் அடைத்து வைத்திருந்தனர். கடந்த இருநூறு வருடங்களாக இவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அநியாயங்களும் அட்டூழியங்களும் கொஞ்சநஞ்சமல்ல. இவர்கள் எந்த விதத்திலும் கல்விகற்று வேறு துறைகளுக்கு போய் முன்னேறிவிடக் கூடாது என்பதில் இவர்களது தலைவர்களே மிகவும் கவனம் எடுத்துக் கொண்டனர்.

More ways to listen