சமூக மாற்றக் கருவியாக பக்திப் பேரியக்கம் | தமிழ்ப் பண்பாடு : ஊற்றுகளும் ஓட்டங்களும் | ந.இரவீந்திரன்
“சனாதன ஒழிப்பு” விவகாரம் ஆப்பிழுத்து மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்ட பின்னரும் விடாத தூவானமாக சனாதனக் கோட்பாட்டு அடிப்படைகளைத் தாக்கும் வீரப் பிரதாபங்கள் ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்டவாறுள்ளன.இவ்வகை விட்டுக்கொடுக்காத வீரதீர முழக்கங்களை எழுப்புகிறவர்களாக மார்க்சியம் பேசுகிற சில பேர் இருப்பது காலதேச நிலவரங்களை விடவும் தமது ‘புரட்சி வேடம்’ கலையக் கூடாது என்ற அவர்களுக்கான அக்கறையையே வெளிப்படுத்துகிறது.அதிகாரத்தில் அப்போது வணிகக் கருத்தியலில் உறுதியுடன் இருந்த சமணமே இருந்தது என்பதும் கவனிப்புக்குரியது. சமண மதத்தில் இருந்து வெளியேறி ஆட்சியாளர்கள் சைவத்தை ஆதரித்த பின்னரே நிலப்பிரபுத்துவச் சார்பான பண்ட உற்பத்திக்கான சாகுபடி சாத்தியப்பட்டு பெருவீத விவசாயப் பெருக்கமும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை உள்ளடக்கியுள்ள வெள்ளாள, பிராமண சமூக சக்திகளும் (திணைகளும் - சாதிகளும்) பெரு நிலப்பிரபுத்துவச் சாதிகளாகத் தோற்றம்பெற்று விருத்தி பெறலாயின.3.வர்க்கங்களாகப் பிளவுண்ட சமூகங்களுக்கு மட்டுமல்லாமல் படிநிலைகளுடன் இயங்கும் சமுதாயங்களையும் கவனத்திலெடுத்து, பொருளியல் அடித்தளத்தை மாற்றியமைக்கும் போராட்டங்களின் வாய