இலங்கையில் தேயிலைப் பயிர்ச்செய்கையும் இயற்கைச்சூழலின் மீது அதன் தாக்கங்களும் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் எம். சின்னத்தம்பி
பெருந்தோட்டத்துறையினது அறிமுகத்தால் அதுவரை காலமும் நிலவிவந்த மானியமுறைப் பொருளாதார அமைப்பு முதலாளித்துவப் பொருளாதாரமுறைக்கு நெகிழ்ந்து கொடுத்ததுடன், பெருந்தோட்டத்துறையினது நடவடிக்கைகளோடு தொடர்புபட்ட புதிய பல தாபனங்களும் உருவாகின. ஆரம்பத்தில் இத்துறைக்குத் தேவையான வங்கிச்சேவைகளை வழங்குவதற்காக சில வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள் இங்கு திறக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, பெருந்தோட்ட உற்பத்திக்குத் தேவையான நிதிசம்பந்தப்பட்ட சேவைகளை வழங்கும் பல்வேறு நிதிநிறுவனங்களின் கிளைகளும், தேயிலைத் தொழிற்சாலைகளின் பொறியியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பெருந்தோட்டப் பிரதேசங்களுக்கு அமைக்கப்பட்ட புகையிரதப்பாதை, பெருந்தெருக்கள், அவற்றில் கையாளப்பட்ட இயந்திர சாதனங்கள் என்பவற்றைப் பராமரிப்பதற்கும் தேவையான பொறியியல் நிறுவனங்கள் சிலவும் தாபிக்கப்பட்டன. 19ம், 20ம் நூற்றாண்டுகளில் பெருந்தோட்ட உற்பத்திக்காக பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டதால் நிலத்தின் மேற்பரப்பு மண் பெரிதும் இழக்கப்பட்டது. தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்ட பின்னர் பல தோட்டமுகாமைகள், மரக்கறி, காய் கனி மரங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தோட்ட வேளாண்மையில் ஈடுபடுவதால்