காலனித்துவ ஆட்சியாளர் விட்டுச்சென்றவையும் (Colonial legacy) பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் ஏற்பட்ட சமூக – பொருளாதார மாற்றங்களும் | இலங்கையின் இனவாத அரசியல்- ஒரு வரலாற்றுப் பார்வை | பி. ஏ. காதர்

Sunday 28 August 2022
00:00
20:56

இலங்கையின் இயல்பான வளர்ச்சி ஐரோப்பியர்களின் காலனித்துவ ஆக்க்கிரமிப்பால் தடைப்பட்டு ஒருவிதமான சார்பு முதலாளித்துவம் உருவானது.

இலங்கை 1505 முதல் 1948 வரை 443 நீண்ட வருடங்கள் மூன்று மேற்கத்தைய நாடுகளின் காலனியாக கிடந்தது. முதலில் போர்த்துக்கேயர்  1505 முதல்  1658 வரை இலங்கையை  தமது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து நாட்டைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் 1658 முதல் 1796 வரை  தமது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். அதன்பின்னர் 1796 முதல் 1948 வரை ஆங்கிலேயரின் காலனித்துவ  பிடிக்குள் வந்தது

பிரித்தானியர் இலங்கையை தமது காலனித்துவ பிடிக்குள் 1796ல்  கொண்டுவந்தபோது அவர்களே உலகில் மிகவும் முன்னேறிய உற்பத்திமுறையைக் கொண்டிருந்தனர். சூரியன் அஸ்தமிக்காத  அவர்களது விரிந்த சாம்ராஜ்யம் உதயமாகிக்கொண்டிருந்தது.

ஆனால் இலங்கையோ இன்னும் பின்தங்கிய - நிலப்பிரபுத்துவ - சுயதேவை பொருளாதாரத்தையே  கொண்டிருந்தது.

இந்தியாவில் காணப்பட்ட முன்னோடி-தொழில்மயமாக்கப்பட்ட முகலாய வங்காளம் (Proto-industrialised Mughal Bengal) போன்ற  ஆரம்ப முதலாளித்துவ வளர்ச்சி இங்கு காணப்படவில்லை. பிரித்தானியர் கண்டியை 1815 ல் கைப்பற்றி முழு இலங்கையையும் ஒரே ஆட்சியின்  கீழ் கொண்டுவந்த  பின்னர்தான் இலங்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

More ways to listen