கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள் - பகுதி 4 | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்

Wednesday 5 October 2022
00:00
08:12

தமிழ் சிங்கள மக்களின் பண்பாட்டு வேறுபாடுகள் மொழிகளின் வேறுபாட்டால் தோன்றியதெனக் கூறும் அறிஞர்களில் சிலர்  இனத்தால் அவர்களின் மூதாதையினர் இயக்கர், நாகர்களின் வழித்தோன்றல்கள் எனக் கூறுகின்றனர். 

ஆயினும் அம்மக்களின் பண்பாட்டுடன் சிங்கள மக்களுக்குள்ள தொடர்புகளும், நினைவுகளும் பௌத்த மதத்தின் வருகையோடு தோன்றிய புதிய பண்பாட்டால் மறைக்கப்பட்டது அல்லது மறக்கப்பட்டன என்றே கூறலாம். ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அப்பண்பாட்டு அம்சங்கள் சிறப்பாகப் பெருங்கற்காலப் பண்பாட்டின் மரபுகள் சில தற்காலம்வரை தொடர்ந்து நிலைத்திருப்பதைக் காணமுடிகின்றன. 

பெருங்கற்கால மக்கள் பிராமி எழுத்தைப் பயன்படுத்த முன்னர் தொடர்பு மொழியாக குறியீடுகளை தமது மட்பாண்டங்களில் பொறித்துள்ளனர். கட்டுக்கரைப் பெருங்கற்கால மக்கள் மட்பாண்டங்களில் மட்டுமன்றி எருதின் சுடுமண் உருவங்களின் வயிற்றுப் பகுதியிலும்  இவற்றைப் பொறித்துள்ளனர். 

அவற்றுள்  சூலம், வேல் முதலான குறியீடுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவ்வடிவிலான குறியீடுகள் பிற்காலத்தில் தமிழர்கள் வெளியிட்ட நாணயங்களிலும், கல்வெட்டுக்களிலும்  தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.


#கட்டுக்கரைஅகழ்வாய்வு #Kaddukkaraiarchaeologicalstudies #malvathuoya #Aruviyaru #kaddukkarai #kaddukkaraikulam #NorthernSriLanka #Universityofjaffna #historicalheritage


More ways to listen