கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் | சமஷ்டி அரசியல் முறைமைகள் | கந்தையா சண்முகலிங்கம்
சர்வதேச தராதரங்களின் படியான மதிப்பீட்டில் கனடா தேசம் பன்மைத்துவத்தின் மத்தியில் ஒற்றுமையை பேணுவதில் வெற்றிகண்டுள்ளது என்றே கூறவேண்டும். கனடா உலகின் சமஷ்டிகளுள் பழமையானது. அது உறுதியான ஒரு சமஷ்டியாக நிலைத்துள்ளது. பன்மைத்துவத்தின் பலபரிமாணங்களையும் ஒரே சமயத்தில் எதிர்கொள்ளும் வல்லமையுடைய சமஷ்டியாக அது விளங்குகிறது. கனடா பன்மைத் தேசியங்களின் நாடாக இருந்து வருவதோடு கியுபெக் பகுதியில் எழுந்த தனித்தேசியம் என்ற கோரிக்கை, பழங்குடிமக்களின் ‘முதலாவது தேசியங்கள்' (First Nations) என்ற கருத்து என்ற இரண்டையும் நேர்முறையாக அணுகியது. கனடாவில் பிரதேச உணர்வும் பிராந்திய அடையாளமும் மிகுதியாக உள்ளது. அது 'சமஷ்டியாக ஒன்று சேர்ந்த சமூகம்’(Federal Society) என்ற தன்மை உடையது. புவியியல் இடப்பரப்பில் மிகவும் பெரியதான கனடாவில் (9,984,670 சதுர கிலோ மீட்டர்) சனத்தொகை அடர்த்தி மிகக் குறைவு. 2008 ஆம் ஆண்டில் ஒரு சதுர கி. மீட்டருக்கு 3.3 ஆட்கள் வதிந்தனர். அங்கு மொத்தம் 33.2 மில்லியன் மக்கள் வாழ்ந்தனர். சனத்தொகை வளர்ச்சி 0.8 வீதமாக உள்ளது. ஐக்கிய அமெரிக்கா - கனடா எல்லையோரமாகவும், சில பெருநகரங்களிலும் கனடாவின் மக்கள் செறிந்து வாழ்கின்றனர