வடக்கின் விருட்சங்கள்: தொலையாது காப்போம்! – மரங்களின்றி மனிதனேது? | வடக்கின் விருட்சங்கள் | சாரதாஞ்சலி மனோகரன்
Friday 24 September 2021
00:00
00:00
சுதேச மரங்கள் மனித வாழ்வியலோடு ஒன்றிப்போனவை. மனித நாகரிகத்தின் சாட்சியாக நிற்பவை என்றெல்லாம் நாம் பார்த்தோம். அவை எதற்கெல்லாம் பயன்படுகின்றன என நாம் சிந்தித்துப் பார்த்திருப்போமா? நாம் அறிந்த பயன்களுக்கப்பால் நாம் அறியாத பயன்களையும் இம்மரங்கள் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது மரங்களை எப்படியெல்லாம் எமது தேவைகளுக்கு நாம் பயன்படுத்தலாம் என்ற சிந்தனை தான் எமக்குள் எழும். ஆயினும் அவற்றையும் தாண்டி இம்மரங்கள் ஆற்றும் தொழிற்பாடுகள் காரணமாகத் தான் இப்புவியிலே உயிர்கள் நிலைத்திருக்கின்றன என்றால் எவராலும் மறுக்க முடியாது. இத்தொழிற்பாடுகள் ‘சூழல் தொகுதிச் சேவைகள்’ என அழைக்கப்படுகின்றன.
More ways to listen