தமிழர் தொடர்பாக பலரும் அறிந்திருந்த 5 பிராமிக் கல்வெட்டுக்கள் | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம்

Monday 10 October 2022
00:00
00:00

தமெத”எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ள ஐந்து கல்வெட்டுக்களும் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம், வடமாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் பெரிய புளியங்குளம், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் குடுவில், மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.  இக்கல்வெட்டுக்களும் பொ. ஆ. மு. 3ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஆ. 5ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் பொறிக்கப்பட்டவையாகும்.  அனுராதபுரம் புராதன நகரில் உள்ள அபயகிரி விகாரைப் பகுதியில் தமிழ் குடும்பத் தலைவன் பற்றிய ஒரு பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. அபயகிரி தூபியின் மேற்குப் பக்கத்தில் சுமார் 300 மீற்றர் தூரத்தில் சில கற்பாறைகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு பாறையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.   பொ. ஆ. மு. 1ஆம், 2ஆம் நூற்றாண்டுகளில் அனுராதபுர நகரில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் வணிகர் குழுவொன்று இந்நகரத்தில் ஒரு முக்கிய கட்டிடமொன்றை அமைத்திருந்தது. வணிகக் குழுவினரின் அங்கத்தவர்கள் கூடி வர்த்தகம் சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து, கலந்துபேசி தீர்மானங்கள் எடுக்கும் ஒரு வர்த்தக அலுவலகமாக இது பயன்படுத்தப்பட்டுள்ளது. #பிராமிகல்வெட்டுகள்  #தமிழ்

More ways to listen