ஆபிரகாம் லிங்கனது மறைவும் நேத்தன் உவோட்டின் நினைவுகளும் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்
1865 ஆம் ஆண்டு ஏப்பிரல் 14 ஆம் திகதி அமெரிக்காவின் 16 ஆவது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்,வோசிங்டன் டி.சி. யிலுள்ள போட்சினது நாடக அரங்கிலே ஜோன் உவில்க்ஸ் பூத் என்ற நடிகரால் சுடப்பட்டார். மறுநாள் லிங்கனது உயிர் பிரிந்தது. ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்ட அன்று யாழ்ப்பாணத்தில் பிறந்தவரும் மருத்துவர் நேத்தன் உவோட்டின் இளையமகனுமாகிய மருத்துவர் சாமுவேல் ரெட் உவோட்டும் இந்த நாடகத்தைப் பார்வையிட, போட்சினது நாடக அரங்கில் பார்வையாளர் வரிசையில் இருந்தார். 1846 இல் யாழ்ப்பாணத்தை கொலரா நோய் மிகக் கடுமையாகத் தாக்கியது. 10000 பேர் வரையில் கொலரா நோயினால் உயிரிழந்தார்கள். மருத்துவர் நேத்தன் உவோட் 13 வருடங்கள் யாழ்ப்பாணத்திலே சேவையாற்றினார். 1846 இல் நேத்தன் உவோட்டும் அவரது மனைவியும் நோய்வாய்ப்பட்டனர். இதனால் அமெரிக்காவுக்குத் திரும்பினர். 1859 இல் உவோட் நோயிலிருந்து முற்றாக விடுபட்டார். இதனால் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று கடமையாற்ற விரும்பி பிறதேசங்களுக்கு தொண்டர்களை அனுப்பும் அமெரிக்க மிசன் சங்கத்துக்கு விண்ணப்பித்தார். மருத்துவர் உவோட் மனைவியுடன் 1860 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி போஸ்ரன் துறைமுகத்திலிருந்து ‘கடலரசன் (Se