கூட்டு ஒப்பந்தங்களும் வேதனத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் முத்துவடிவு சின்னத்தம்பி

Friday 1 July 2022
00:00
00:00

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் கூட்டு ஒப்பந்தமொன்றின் ஊடாக வேதனங்களை நிர்ணயிப்பது தோட்டத்தொழிலாளரின் வேதனங்களை நிர்ணயிப்பதில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு முக்கிய அபிவிருத்தியாகும்.  தோட்டத்தொழிலாளர் பொதுவாகவே வேலைவழங்கப்படும் நாட்களில் முழுமையாக வேலைக்குச் சமூகமளிப்பதில்லை. அவர்களது வேலைவருகையானது அவர்களது தேகநலன், குடும்ப அங்கத்தவர்களுக்கு ஏற்படும் சுகயீனங்கள் உட்பட வேறு குடும்பப்பிரச்சினைகள், அவர்களது சமூகக் கடப்பாடுகள், காலநிலைத்தன்மை, தோட்டங்களுக்கு வெளியே சற்று உயர்ந்த வேதனத்தில் மாற்று வேலைவாய்ப்புக்களின் கிடைக்குந்தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படும். 1990 க்கும் 2002 க்குமிடையே தேசியமட்டத்தில் வறுமைக்கோட்டிற்குக்கீழே வாழ்வோரின் விகிதாசாரம் 22.0 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது. ஆனால் இதேகாலப்பகுதியில் தோட்டப்புற மக்களிடையே அது 20.5 வீதத்திலிருந்து 38.4 வீதமாக 40.0 வீதத்தால் அதிகரித்தது.  #realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம்  #தோட்டத்தொழிலாளர்கள் #மலையகப்பெண்கள்  #தேயிலைத்தோட்டம

More ways to listen