இரசவர்க்கம் – திரிபலை | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம்

Friday 19 August 2022
00:00
00:00

கடுக்காய்த்தூள், தான்றிக்காய்த்தூள், நெல்லிக்காய்த்தூள் மூன்றையும் சம அளவில் கலந்து தயாரிக்கப்படும் திரிபலை சூரணம் (Triphala churna) ஆயுள்வேத மருத்துவர்களின் கைகண்டமருந்தாகும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இம்மருந்து பயன்படுத்தப்படுகின்றது. திரிபலைச் சூரணத்தைத் தொடர்ந்து எடுத்துவந்தால் இரத்தத்தில் உள்ள கொலெஸ்றோலைக் குறைக்கமுடியும். திரிபலை சூரணம் இருதயம் ஈரல் சமிபாட்டுத்தொகுதி கண்கள் போன்ற உடல் உறுப்புக்கள் பலவற்றுக்கும் நன்மை பயப்பதுடன் உடல் நிறையைக் குறைக்கவும் உதவுகிறது. கண்ணில் ஏற்படக்கூடிய வியாதிகளைத் தடுத்து கண்களுக்கு வலுவூட்டும் மருந்தாக திரிபலைச் சூரணம் கருதப்படுகிறது. கடுக்காய் - இழையங்களுக்கு வலுவும் ஊட்டமும் கொடுப்பதன்மூலம் கடுக்காய் பெருங்குடல், ஈரல், நுரையீரல் என்பவற்றுக்கு வலு ஊட்டுகிறது. இது ஒரு பயன் தரக்கூடிய அதே சமயம் பாதுகாப்பான மலமிளக்கி (laxative) யாகும். சமிபாட்டுக்குடலில் சேரக்கூடிய இயற்கையான நச்சுப்பொருட்களை அகற்றிக் குடலைச்சுத்தம் செய்கிறது. எந்தவிதமான பக்கவிளைவும் இன்றி இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வரலாம். நெல்லிக்காய்த்தூளைத் தயிருடன் சேர்த்து உண்டால் சீதபேதி (dysentery) எனப்

More ways to listen