பால்: உணவு முதல் வணிகம் வரை | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | Dr. சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்
இலங்கையில் இறக்குமதியாகும் பால்மாவின் விலை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முதல் 380 /= ரூபாவாக இருந்த 400 கிராம் பால்மா இன்று 116௦/= வரை அதிகரித்துள்ளது. இது சாதாரண மக்கள் நுகரமுடியாத அதிகரிப்பாகும். அத்துடன் வழமையாக கிராமத்தின் பெட்டிக் கடைகளிலும் இலகுவாகக் கிடைக்கக் கூடிய பால் மாவை நகரங்களின் பிரதான பல்பொருள் அங்காடிகளிலும் பெறமுடியாது மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். உள்நாட்டில் உள்ள பசுக்களில் இருந்து பெறப்படும் திரவப் பால் கூட கிடைக்க முடியாத நிலையே பல இடங்களில் நிலவுகிறது. பல இடங்களில் அதிக விலையில், அதாவது 17௦/= ரூபா வரையில் திரவப் பால் விற்கப்படுவதையும், விற்பனை நிலையங்களுக்கு வரும் பால் சில மணி நேரத்தில் முடிவடைவதையும் காண முடிகிறது. குறைந்த பட்சம் இரண்டு வேளை பாலையோ, பால்தேநீரை அருந்திய பல இலங்கை மக்கள் அதனை ஒரு வேளையாக குறைத்தோ அல்லது முற்றுமுழுதாக அருந்துவதை நிறுத்தியோ உள்ளனர். ஏனைய புரதம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துகளை வழங்கும் உணவுகளின் தட்டுபாடு நிலவும் இந்த காலத்தில் பால் நுகர்வின் வீழ்ச்சி ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத