வனவளமும் வன முகாமைத்துவமும் | வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும்

Tuesday 13 September 2022
00:00
10:31
நிலப்பயன்பாட்டின் அடிப்படையில் 1,888,607 ஹெக்டெயர் நிலப்பரப்பை கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில், வடமாகாணம் 889,007 ஹெக்டெயர் நிலப்பரப்பையும் கிழக்கு மாகாணம் 999,600 ஹெக்டெயர் நிலப்பரப்பையும் கொண்டிருக்கின்றது. இந்த வகையில் கிழக்கு மாகாணம் அதிக நிலப்பரப்பை கொண்டிருப்பதுடன் நீர்ப்பரப்பு என்ற வகையில் வடமாகாணத்தில் 8% நீர்ப்பரப்பும் கிழக்கு மாகாணத்தில் 6.35 சதவீதமுமாக மொத்தமாக இவ்விரு மாகாணங்களிலும் 14.35% ஆன பங்கு நீர்ப்பரப்பாக காணப்படுகின்றது.
நிலப்பாவனையின் அடிப்படையில் வடமாகாணத்திலேயே அதிக காடுகள் காணப்படுகின்றன. 735,413.67 ஹெக்டெயர் காடுகள் இவ்விரு மாகாணங்களிலும் காணப்படுவதுடன் வடமாகாணத்தில் 459,129.67 ஹெக்டெயர் நிலங்களில் காடுகளும் கிழக்கில் 276,286 ஹெக்டெயரிலும் காணப்படுகின்றன. மனித பாவணைக்குட்பட்ட காணிகள் என்ற வகையில் வடக்கில் 75,749.79 ஹெக்டெயரிலும் கிழக்கில் 74,942 ஹெக்டெயருமாக மொத்தம் 179,031.38 ஹெக்டெயர் பரப்பில் காடுகள் காணப்படுகின்றன
காடுகளின் வளங்கள் இவ்விரு மாகாணத்திலும் அதிகம் காணப்பட்டிருந்தாலும் அதனை வருமானம் தரும் வளமாக பாவிக்கும் தன்மை குறைவாகவே காணப்படுகின்றது. காடுகளை பொருளாதார வளமாக கொண்ட மலேசியா, பர்மா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்தே இன்றைய சர்வதேச சந்தை தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. எனினும் வடகிழக்கு மாகாணங்களில் காடுகள் பொதுக்காடுகளாக மட்டுமே காணப்படுகின்றன. வனபரிபாலன திணைக்களம் மற்றும் அரசமரக்கூட்டுத்தாபனம் ஆகிய இரு அரச அமைப்புக்கள் இதன் முகாமைத்துவத்துக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளன.
மாறிவரும் காலநிலை மாற்றத்துக்கேற்ப உற்பத்தி மீதான தாக்கத்தை குறைத்துக் கொள்வதில் , பாதுகாப்பான பசுமைப் போர்வையை பெறுவது தொடர்பில் இலங்கை செய்து கொண்டுள்ள சர்வதேச சூழல் பாதுகாப்பு உடன்படிக்கைக்கமைய , காபன் நன்கொடையை (Carben Credit) பெற்றுக் கொள்வதற்கு மிகவும் உதவியளிக்கும் மாகாணங்களாக இவ்விரு மாகாணங்களுமே இருந்து வருகின்றன. 

#fishing #fishinglife #fishing #coastalcommunity #coastalcommunities #Jaffna #fishingcommunity #fishingcommunities #northernsrilanka #ruraleconomics #ruraldevelopment #socialimpact #socialgood #resources #poverty #foodsecurity #sustainabledevelopment #communitydevelopment #farming #livestock #poultryfarming
More ways to listen