இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள்- பகுதி 2 | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் பரமு. புஷ்பரட்ணம

Sunday 7 August 2022
00:00
00:00

கட்டுக்கரையில் நுண்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாகப் பெருங்கற்காலப் பண்பாடு தோன்றியுள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட இரு அகழ்வாய்விலும் இப்பண்பாடு பற்றிய ஆதாரங்களே அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வடஇலங்கை வரலாற்றுக்கு சிறப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றிற்குப் புதுவெளிச்ச மூட்டுவதாக உள்ளன. பெருங்கற்காலப் பண்பாடு  என்பது இறந்தவர்களுக்கான ஈமச் சின்னங்கள் பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டதால் தோன்றிய பெயராகும். வட இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பெருங்கற்காலக் குடியிருப்பு மையமாகக் கட்டுக்கரை காணப்படுகின்றது. இதை அநுராதபுரத்திற்கு அடுத்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய குடியிருப்பு பிரதேசம் எனக் கூறலாம்.  கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்விலேயே பெருங்கற்கால மக்களின் சமய நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் அதிகளவிலான  சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நாக வழிபாட்டுக்கு உரிய சான்றாதாரங்கள் மிகப்பெரிய அளவில் கிடைத்திருப்பது சிறப்பாக நோக்கத்தக்கது.  கட்டுக்கரை அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்கால மட்பாண்டங்களில் சிலவகையான குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு குறியீடு

More ways to listen