தமிழில் ஆங்கில மருத்துவம் கற்பித்த அமெரிக்கர் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்

Tuesday 6 December 2022
00:00
00:00

மருத்துவர் கிறீன், தமிழில் விஞ்ஞானம் அறிமுகமாகாத காலத்தில் ஆங்கில மருத்துவத்தைத் தமிழிற் கற்பித்தவர்; தமிழில் விஞ்ஞானந் தந்த தந்தை; மருத்துவத் தமிழ் முன்னோடி; தமிழ்க் கலைச்சொல்லாக்க முன்னோடி என்று தமிழறிஞர்களால் விதந்துரைக்கப்படுகிறார். “தமிழில் விஞ்ஞானம் கற்பிக்க முடியுமா? என்ற ஐயம் தமிழர்களுக்கு இருந்தது. தமிழர்களுக்கே தமிழ்மொழி மீதிருந்த நம்பிக்கையிலும் பார்க்க அமெரிக்க நாட்டவரான மருத்துவர் கிறீனுக்கு அந்தக் காலத்திலேயே தமிழில் விஞ்ஞானம் கற்பிக்க முடியும் என்ற கூடிய நம்பிக்கை இருந்ததைக் கண்டு எமது சமுதாயம் வெட்கப்படல் வேண்டும்” என்று  அம்பிகைபாகன்  தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணத்தில் நாவற்குழி என்னும் கிராமத்தில் 1929 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 27 ஆம் திகதி பிறந்த அம்பிகைபாகன் சர்வதேச புகழ்பெற்ற கவிஞரும் கல்வியியலாளருமாவார். இவர் விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியராக இலங்கையின் பல பாகங்களிலும் கடமையாற்றியுள்ளதுடன் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ்ப் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அமெரிக்காவுக்கு இரு தடவைகள் செல்லும் வாய்ப்புக் கிடைத்த போது கிறீனது பேரன்  தோமஸ் டி. கிறீனை சந்தித்ததுடன் கிறீனது

More ways to listen