பால்: உணவு முதல் வணிகம் வரை | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | Dr. சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

Wednesday 21 September 2022
00:00
16:16

இலங்கையில் இறக்குமதியாகும் பால்மாவின் விலை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முதல்  380 /= ரூபாவாக  இருந்த 400 கிராம் பால்மா இன்று 116௦/= வரை அதிகரித்துள்ளது. இது சாதாரண மக்கள் நுகரமுடியாத அதிகரிப்பாகும். அத்துடன் வழமையாக கிராமத்தின் பெட்டிக் கடைகளிலும் இலகுவாகக் கிடைக்கக் கூடிய பால் மாவை நகரங்களின் பிரதான பல்பொருள் அங்காடிகளிலும் பெறமுடியாது மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

உள்நாட்டில் உள்ள பசுக்களில் இருந்து பெறப்படும் திரவப் பால் கூட கிடைக்க முடியாத நிலையே பல இடங்களில்  நிலவுகிறது. பல இடங்களில் அதிக விலையில், அதாவது 17௦/=  ரூபா வரையில் திரவப் பால் விற்கப்படுவதையும், விற்பனை நிலையங்களுக்கு வரும் பால் சில மணி நேரத்தில் முடிவடைவதையும் காண முடிகிறது. குறைந்த பட்சம் இரண்டு வேளை பாலையோ, பால்தேநீரை அருந்திய பல இலங்கை மக்கள் அதனை ஒரு வேளையாக குறைத்தோ அல்லது முற்றுமுழுதாக அருந்துவதை  நிறுத்தியோ உள்ளனர். ஏனைய புரதம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துகளை வழங்கும் உணவுகளின் தட்டுபாடு நிலவும் இந்த காலத்தில் பால் நுகர்வின் வீழ்ச்சி  ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் கட்டாக்காலிகளாக காடுகளில் திரிந்த விலங்குகளை பழக்கப்படுத்திய மனிதன் அவற்றிலிருந்து பாலையும், பாலிலிருந்து தயிர், வெண்ணெய், நெய்  போன்ற பல உணவுகளையும்  உருவாக்கி உண்ணத் தொடங்கியிருந்தான். தொழில்நுட்பம் மேம்படத் தொடங்க  குறிப்பாக குளிர்ப்பதன வசதிகள் உருவாக,  நீண்ட காலம் வைத்திருக்க தக்க பாற் பொருட்கள் உருவாக்கப்பட்டன.

 சமகாலத்தில்  மில்லியன் கணக்கான பணத்தைச் செலவிட்டு அதிக பால் தரக்கூடிய கால்நடை இனங்களை  உருவாக்கி,  சகல வசதிகளும் கொண்ட பிரமாண்டமான தொழிற்சாலைப் பண்ணைகளை அமைத்து, பல ஆயிரம் ஏக்கரில் செய்யப்படும் தீவனப் பயிர்களையும், பெருமளவு வர்த்தக விலங்குணவுகளையும்  உணவாக வழங்கி, செய்யப்படும் மிகப் பெரும் வணிகமாகும். பல ஆயிரக் கணக்கான  நேரடி,  மறைமுகத் தொழில்களை தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ,நாடுகளுக்கும் ஏற்படுத்தியுள்ள பெறுமதியான தொழிலாகவும் இது மாறியுள்ளது

More ways to listen