தமிழ் அடையாளத்தினூடாக யாழ். உயர்வர்க்க நலன் பேணல் | இலங்கையில் அடையாள அரசியல் | கலாநிதி சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம்

Tuesday 16 August 2022
00:00
00:00

யாழ். உயர்வர்க்கம் தமது நலன்களுக்காக தமிழ்த் தேசிய உணர்வினையும் அவ்வடையாளத்தினையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்துள்ளதை இலங்கை அரசியல் வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. சிங்களத் தேசிய வாதம் தமிழர்களையும் காலனித்துவ ஆட்சியாளர்களையும் மிகவும் தந்திரோபாய ரீதியில் கையாண்டு தமிழ் தேசிய வாதத்தினை முறியடிப்பதிலும் தமது தேசிய வாதத்தினை வளர்த்தெடுப்பதிலும் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டு வந்திருப்பதை வரலாறு முழுக்க அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் டொனமூர் அரசியல் திட்டம் சிங்களத் தேசிய வாதத்துக்கு கிடைத்த பெரும் கொடை எனலாம். இனவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கேட்டு ஒற்றைக்காலில் நின்று குரலெழுப்பிய தமிழ்த் தேசியவாதிகள் தமக்கு அளிக்கப்பட்ட பதவிகளுக்குள் கட்டுப்பட்டு அமைச்சரவைக்கும் டொனமூர் அரசியலமைப்புக்கும் தேசாதிபதிக்கும் விசுவாசமானவர்களாக விளங்கினார்கள். தமக்குக் கிடைத்த பதவிகள் மூலம் தேசாதிபதியின் நம்பிக்கையினைப் பெற்று வடகிழக்குத் தமிழர்களுக்கான ஆட்சியுரிமையினை பெற்றுக்கொடுப்பதற்கான எந்தவொரு செயலையும் இவர்கள் முன்னெடுக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். இதனை சந்தர்ப்பவாத தமிழ்த் தேசியத்தின் வெளிப்பாடாக

More ways to listen