யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகளில் சிறுதானியங்கள் | மாறுபாடில்லா உண்டி | தியாகராஜா சுதர்மன்

Monday 3 October 2022
00:00
14:14

வரகு, கம்பு, சோளம், சாமை, குரக்கன், தினை போன்ற சிறுதானியங்கள் பாரம்பரிய உணவுப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

சிறுதானியங்கள் பெரும்பாலும் வறட்சியிலும் விளையக்கூடிய பயிர்களாகும். ஏனைய தானியங்களுடன் ஒப்பிடும்போது

சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம். B வகை உயிர்ச்சத்துகளையும், பொஸ்பரஸ், இரும்புச்சத்து, கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம், நாகச்சத்து போன்ற கனிமங்களையும் கொண்டுள்ளன.

சிறுதானியங்கள்  நார்ச்சத்தானது மேலதிகமாக உடலில் உணவு தங்குவதைத் தடுக்கின்றது.இதனால் மல வெளியேற்றத்தைத் தூண்டுகின்றது. இதனால் மேலதிகமாக உடலில் கொழுப்புச் சேர்தல், கொலஸ்திரோல் உருவாக்கத்தை தடுக்கின்றது. இதய நோய்கள், அதிஉடற்பருமன், குடற்புற்றுநோய்கள் என்பவற்றை தடுக்கின்றது.

சிறுதானியங்கள்  சமிபாடு அடையக்கூடிய, சமிபாடு அடையமுடியாத நார்ச்சத்துக்களைக் கொண்டது. இதனால் உடலில் உள்ள நன்நுண்ணுயிரிகள் (Probiotics) பெருக்கத்துக்கு உதவுவதால் சமிபாட்டையும் இலகுவாக்குகின்றது. இவ்வாறான நார்ச்சத்துக்கள் நன்நுண்ணுயிர்ப்போசிகள் (Prebiotics) என்று அழைக்கப்படுகின்றன.

எமது உணவுப்பழக்கமானது பருவகாலமாற்றங்களுக்கு ஏற்ப மாறுபடும். அதேபோல் சில நோய்நிலைகளில் பத்தியமாகவும் (உண்ணக்கூடியது) அபத்தியமாகவும் (உண்ணக்கூடாதது) கொள்ளப்படும். இச்சிறுதானிய உணவுகள் சில பருவகாலங்களில், சில நோய்நிலைகளில் உள்ளெடுக்கவும் சிலவற்றில் தவிர்க்கவும் வேண்டும்.

#Grains #Wheat #Pearl #Millet #கம்பு #சோளம் #Sorghum #Corn #வாற்கோதுமை #வரகு #ProsoMillet #தினை #Foxtailmillet


More ways to listen