வேடரும் காலனியமும் | வேடர் மானிடவியல் | கமலநாதன் பத்திநாதன்

Thursday 27 October 2022
00:00
00:00

இலங்கைத்தீவின் பூர்வீககுடிகளாக வேடர்கள் காணப்படுகின்றமை பலருக்கும் தெரிந்த விடயமாகும். அண்மைக்காலமாக வேடர் மானுடவியல் சார் பார்வைகள் பல ஆய்வாளர்களிடையே அகலித்துள்ளன. இது இலங்கையர்களான நமக்கும் மிகத் தேவையான விடயப்பொருள்தான். காரணம் இன்றைய  நவீன உலகானது  வரலாறு, பண்பாடு  மற்றும் மானிடவியல்  சார்ந்த ஆய்வாளர்களையே பெரிதும் வேண்டி நிற்கிறது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இவ்வகையான மானிடவியலாய்வை வேடர் சமூகத்தின்பால் தொடக்கி விட்ட பெருமை  “செலிக்மனையே” சாரும். வரலாற்றுக் காலம் முதல் இன்றைய காலம் வரை இலங்கையின் வேடர் சமூகம் சார்ந்தும், அவர் தம் பண்பாடு, சடங்கார்ந்த விடயங்கள் மற்றும் மரபு சார்ந்து பல ஆதாரங்கள் தீவின் நெடுகிலும் கொட்டிக்கிடக்கின்றன. அவ்வாறு இருக்கையில் ஏன் இச்சமூகம் சார்ந்த பார்வைகளானது, இன்னமும் ஒரு பாவப்பட்ட உயிரிக்கு உதவுவதாகவும், நம்மால் தான் உதவ முடியும் என்றெண்ணிக் கொண்டு இச்சமூகத்தின்பால் பூர்வகுடியென்ற உருவைச் சிதைப்புச் செய்வதாகவும் காணப்படுகின்றன?காணப்பட்டு வருகின்றன? என்பதனை நுணுகி ஆராயும் போதுதான்  அதன் பின்னுள்ள காலனியச் சிந்தனையும், அதன் சிலந்திச் சிக்கலும் பற்றி அறியக்கிடைக்கின்றது. இன

More ways to listen